Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டம் வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கடும் வரட்சி காலநிலை காரணமாக, விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட விவசாயிகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக, 16 மாவட்டங்களை வரட்சி மாவட்டமாக அரசாங்கம் பிரகடப்படுத்தியது. எனினும், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் அதற்குள் அடங்கப்படவில்லை.
இது குறித்து உரிய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், மன்னார் மாவட்டமும் தற்போது வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வரட்சி ஏற்பட்டு பல நாட்களின் பின்னர், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்படவில்லை.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டதையடுத்து, பாதிப்படைந்திருந்த விவசாய செய்கைகளையும் நான் நேரடியாக பார்வையிட்டேன்.
தற்போது, 17 ஆவது மாவட்டமாக மன்னார் மாவட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற வரட்சி நிவாரணங்கள், சமனான முறையில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago