Freelancer / 2022 மார்ச் 11 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் குறித்த விபத்து இடம்பெற்றது.
நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள், பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, விபத்துக்குள்ளான முதியவர் கீழே விழும் போது, பின்னால் வந்த மற்றுமொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதியுள்ளது.
இதில், குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.
விபத்ததுடன் சம்மந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து சென்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தடவியல் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது முதியவரின் பின்னால் இராணுவ வாகனம் ஒன்று வந்ததாகவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டதாகவும், இராணுவ வாகனம் நிறுத்தி விட்டு, பின்னர் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டதாகவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர். (R)





4 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
13 Nov 2025