Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட 5,500 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என, வவுனியா மாவட்டப் பதில் செயலாளர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் கொரோனர் சமகால நிலமை தொடர்பாக, வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாகவும் 3,585 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், 28 தரப்பினருக்கு, ஊரடங்கு காலப்பகுதியில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
'மேலும், 2,000 ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை பெறுவதற்கு 17,270 தகுதிபெற்றுள்ளனர். அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிதியை;, முதற்கட்டமாக 8,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்' எனவும், அவர் தெரிவித்தார்.
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago