2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் 5,885 ஹெக்டயரில் சிறுபோகம்

Princiya Dixci   / 2022 மார்ச் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

இம்முறை வவுனியா மாவட்டத்தில் 5,885 ஹெக்டயரில் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 2,000 ஹெக்டயர் வரை நெற் செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரும்போக நெற்செய்கையின் போது இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு தட்டுப்படு ஏற்பட்டதால் சிறந்த விளைச்சல் இன்மையால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்குள்ளான நிலையில் தற்போது சிறுபோக நெற் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேதன பசளையை பயன்படுத்தி சிறுபோக செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், கமநல சேவை நிலையங்கள் ஊடாக சேதன பசளைகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

இருந்த போதும் கமநலவ சேவை நிலையங்களுக்குத் தேவையான சேதன பசளைகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக சேதன பசளைகளை உரிய நேரத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .