2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவுக்கு மனோ விஜயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்  

நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வவுனியாவுக்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டபோது, வவுனியாவுக்கு விஜயம் செய்யுமாறு, நகர சபைத் தவிசாளர் இ. கௌதமன் விடுத்த வேண்டுகோளுக்கமையவே, அமைச்சர் மனோ கணேசன் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.   

இதன்போது, வவுனியா நகர்ப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பாகப் பார்வையிட்ட அமைச்சர், பழைய பஸ் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளையும் ஆராய்ந்தார். 

அத்துடன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.சுஜானால், வர்த்தக நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்பட்டன. 

இதையடுத்து, இலுப்பையடிப் பகுதியிலுள்ள தினச் சந்தைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், தினச்சந்தைக்குப் பின்னாலுள்ள குளத்தையும் பார்வையிட்டார். 

இந்த விஜயத்தில், நகர சபைத் தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, நல்லிணக்க அமைச்சின் வடக்குக்கான இணைப்பாளர் எஸ்.விமலச்சந்திரன், அமைப்பாளர் ஜனகன், வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் கோட்டக் கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா உட்பட பலரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .