Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
க. அகரன் / 2018 மே 31 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்டத்தின் நகரசபை உள்ளிட்ட 5 உள்ளுராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (31) 2 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவர் மீது வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலர் ஒருவர் தாக்க முற்பட்டிருந்தார். இது தொடர்பில் நகரசபை தலைவரால் முறைப்பாடு செய்யப்பட்ட போது அவரது பதவிநிலையில் அவர் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்து அடையாள பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றது.
இதன்போது, குறித்த சிறைப் பாதுகாவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் 2 மணிநேரம் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் தமது ஆதரவினை வழங்கி 2 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
13 May 2025