2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா பஸ் நிலைய விவகாரம் : ‘போராட்டம் நடத்துவோம்’

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், பஸ் நிலைய வர்த்தகர்களுக்குச் சார்பாக, ஏனைய வர்த்தகர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்” என, வவுனியா வர்த்தக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

வவுனியா வர்த்தக சங்கத்தில், இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வவுனியா பஸ் நிலைய வர்த்தகர்கள் தொடர்பில் சரியான முடிவெடுக்காத பட்சத்தால், வர்த்தகர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, உள்ளூர் பஸ் சேவையை பழைய பஸ் நிலையத்தில் ஓட விடும்பட்சத்தில் வர்த்தகர்கள் பாதிப்படையாது தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

“இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இதற்கு ஒரு சாதகமான பதில் கிடைக்காதவிடத்து, ஏனைய வர்த்தகர்களும் பஸ் நிலைய வர்த்தகர்களுக்கு ஆதரவுத் தெரிவித்து, போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X