2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இணைத்தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் கே. கே. மஸ்தான், குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பல்வெறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான காலங்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

இதன்போது வவுனியா வடக்கில் மீள் குடியேறியுள்ள இந்தியாவில் இருந்து வருகைதந்தவர்களுக்கும் வன இலாகாவினருக்கும் இடையிலான பிரச்சினைகள், வரட்சியால் நன்னீர் மீன் வளர்ப்பாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அருவித்தோட்டம் குளத்தை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இராணுவத்தினரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள், பம்பைமடுவில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன குப்பைகளை கொட்டுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், வவுனியா கூட்டுறவுக் கல்லூரி புனர்வாழ்வு முகாமாக செயற்படுவதும் அதனை மீள்ப்பெறுவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக கலந்துரையாடப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X