Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
90 இலட்சம் ரூபாய் பெறுமதியில் புனரமைக்கப்பட்ட வவுனியா நகரசபை பொதுப்பூங்கா, நேற்று முதலமைச்சரினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
நெல்சிப் திட்டம் மற்றும் வவுனியா நகரசபையின் 90 இலட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டது.
வவுனியா நகரசபை செயலாளர் இ. தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே. கே. மஸ்தான், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன், செ. மயூரன், எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா, ஏ. ஜெயதிலக, வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன குமார மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுர்தீனின் இணைப்பாளர்கள, வட மாகாணசபை உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரினால், வவுனியா குருமண்காட்டில் நகரசபையின் நிதியீடான 30 இலட்சம் ரூபாய் செல்வில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையின் கட்டடம், சிங்கள பிரதேசத்துக்கான கலாசார மண்டபம், சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயப்பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா களம், கல்நாட்டியகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட இயற்கை பூங்கா, ஓமந்தையில் அமைக்கப்பட்ட வன்னியூற்று பெண்களின் உணவகம், செட்டிகுளம் பொது சந்தை கட்டடத்தொகுதி என்பவற்றையும் திறந்து வைக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago