2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி பேரணி

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழமாக மாற்றக்கோரி,  வவுனியாவில் பேரணியொன்று இன்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக, கடந்த 25 ஆண்டுகளாக இயங்கும், வவுனுவில் இயங்குளம் வளாகத்தினை, தனியான வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

வவுனியா, குருமன்காட்டிலுள்ள விஞ்ஞான பீடத்தில் இருந்து, ஆரம்பமான இப்பேரணி, ரயில்  நிலையவீதி வழியாக, கண்டிவீதியை சென்றடைந்து, நகர் வீதியின் ஊடாக, வவுனியா மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

அதனையடுத்து, வவுனியா மாவட்ட செலாளர் ரோஹண புஸ்பகுமாரவிடம், ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரி, மகஜரொன்று, வவுனியா வளாக ஆசிரியர் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, புதிய பஸ் நிலையம் வரை சென்ற பேரணி, அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
இந்த பேரணியில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கே. கே. மஸ்தான், மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,  பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன்,  உறுப்பினர்களாக செ. மயூரன், ஆர். இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன், எம். தியாகராசா உள்ளிட்டவர்ளும்,  பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .