2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் கொலை; ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் இளைஞரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 11ஆம் திகதி பிற்பகல் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார், மருதானை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

குறித்த நபர், தெபுவன - மதுகம பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் தொடர்புபட்டிருந்த நிலையில் தலைமறைவாகி, வவுனியாவில் வசித்து வந்ததாகவும் பின்னர் வவுனியாவில் இடம்பெற்ற கொலையின் பின் மருதானைப் பகுதியில் சென்று வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரை, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .