2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் 96 பேருக்கு டெங்கு

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி  மாதம் 21ஆம் திகதி வரை 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந நிலையில் வவுனியா சகாதார வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், மலேரியா தடை இயக்கத்தினர், பூச்சி ஆய்வாரள்கள்  மேற்கொண்ட விசேட நடவடிக்கை காரணமாக கடந்த வாரம் 11 பேரும் இவ்வாரம் 24 பேருக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

அரச திணைக்களங்கள், விடுதிகள், தனியார் விடுதிகள் பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் அசுத்தம் பேணும் சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .