Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை பொது நூலகங்களான ஒட்டுசுட்டான், ஒலுமடு ஆகிய நூலகங்களினால் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு முன்பள்ளி, பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கதைகூறும் நிகழ்வு, மற்றும் பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை,பேச்சு,சித்திரம்,ஒட்டுச்சித்திரம்,பொது விவேகமும் நுண்ணறிவும் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பரிசுப் பொருs;களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (25), ஒட்டுசுட்டான் - கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மண்டபத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ராஜமல்லிகை, சிவசுந்தர சர்மா சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி அலுவலகர் சி.சுப்பிரமணியேஸ்வரன், ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை முதல்வர் வே.நித்தியகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

27 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
49 minute ago