2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டில் நால்வர் படுகாயம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

க. அகரன்

இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்குபேர் காயமடைந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் , வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் வௌ்ளிக்கிழமை (16) பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்… 

இன்றையதினம் (16)  அதிகாலை குறித்தவீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுளைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டில்இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரதுமனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த மூவர்செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளநிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X