Freelancer / 2022 மார்ச் 03 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது மல்லாவியினை சேர்ந்த 39 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27.02.2022 அன்று கனகராயன் குளம் வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை வீதியால் சென்ற ஊர்தி மோதிவிட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞன் வீதியில் உயிரிழந்த நிலையில் வீதியின் ஓரம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சுண்டிக்குளியினை பிறப்பிடமாகவும் மல்லாவி வடக்கு மல்லாவியினை வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் சகாயரூபான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பிற்கு யார் காரணம் என இதுவுரை கண்டறியப்படாத நிலையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மல்லாவியில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (R)
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026