Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி – பூநகரி, முக்கொம்பனில் பழுதடைந்த பஸ்ஸை, கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபையின் பொறியியல் பிரிவினர் மிக வேகமாக விரைந்து திருத்தம் செய்து மீண்டும் பயணிக்க வைத்தமை பஸ்ஸில் பயணித்த பயணிகளிடையே மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு தனது சேவையைத் தொடங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ், பிற்பகல் 1.45 மணிக்கு அக்கராயன் வழியாக முக்கொம்பன் பூநகரி வழியாக யாழ்ப்பாணத்துக் நாள்தோறும் பயணிக்கும்.
நேற்று அக்கராயனில் இருந்து தனது பயணித்தை ஆரம்பித்து 15 நிமிடங்களில் பஸ் பழுதடைந்து விட்டது. பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்க வேண்டிய பெருமளவு பயணிகள் இருந்தார்கள்.
பஸ் பழுதடைந்து விட்டதென்ற செய்தியை கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபையின் முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவித்தபோது, ஸ்தலத்துக்கு விரைந்த பொறியியல் பிரிவினர், பழுதடைந்த பஸ்ஸை திருத்தம் செய்து, பயணிகளை தொடர்ந்து பயணிப்பதற்கான வழிகளை உருவாக்கினார்கள்.
விரைந்து செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சிக் கிளையின் பொறியியல் பிரிவினரை மக்களின் நெருக்கடி அறிந்து வேகமாகச் செயற்பட்டமைக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
15 minute ago
46 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
46 minute ago
59 minute ago