Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
எமது மண்ணில், நாங்கள் உடல், உள ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ்வதற்கு விளையாட்டு மிக மிக அவசியமானதென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி - கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட நெல்மணிகள் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும், நேற்று (14) இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பெரும் போர் நடந்த யுத்தம்நடந்த இந்த மண்ணில் எத்தனையோ ஆயிரம் உறவுகளை இழந்த இந்த மண்ணிலே இன்று இந்த விளையாட்டு விழாவைப் பார்க்கின்றோம், எங்களுடைய எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றோம்.
எங்களுடைய தேவைகள் பற்றியெல்லாம பேசுகின்றோம்; கேட்கின்றோம், என்றால் இதற்குப் பின்னால் ஒரு சரித்திரம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
காரணம் நாங்கள் விளையாடுகின்ற மண்ணில் எத்தனையோ பேரைப் புதைத்திருக்கின்றோம். எத்தனையோ பேரின் கண்ணீரோடும் அழுகுரல்களோடும் தான் இந்த வாழ்க்கையை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.
இன்னும் அதனை சரியாக நிம்மதியாக அனுபவிக்கக்கூடிய ஒரு நிரந்தரமான சூழலை நாங்கள் இந்த மண்ணில் காணவில்லை.
சிறையில் வாடுகின்ற கைதிகளுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் நடைபயணம் செய்தார்கள். மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்பங்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லம் கடந்து எங்களுடைய ஆரோக்கியம் எங்களுடைய மனநிலை இந்த மண்ணிலே உறுதிமிக்கதாக அமைய வேண்டுமானால் விளையாட்டு மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த விளையாட்டு நிகழ்வுகள் பங்குகொள்கின்றோம் என்றார்.
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago