Freelancer / 2022 மார்ச் 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயனில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயனின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்காக நிலப் பண்படுத்தல்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அக்கராயன் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் முடிந்த நிலையில் டீசலுக்காக விவசாயிகள் ஒரு கிலோமீற்றர் வரையான நீண்ட வரிசையில் நின்று, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருக்கின்றனர்.
விவசாய கூட்டங்களை நடாத்தும் அதிகாரிகள் எரிபொருளினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது அக்கராயன் குளத்தின் கீழான பயிர்ச் செய்கைகள் எரிபொருள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (R).

4 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
13 Nov 2025