Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில், நேற்று (25) இரவு வீட்டு வளவு ஒன்றுக்குள் உணவு, நீர்த் தேடிச் சென்ற முதலை ஒன்று, ஒழிந்து கொண்டுள்ளது.
பூந்தோட்டம் குளத்திலிருந்த முதலை ஒன்று, நேற்று இரவு 8 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றுக்குள், உணவு, நீர்த் தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது.
இதைக் கண்ட வீட்டு நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது, முதலை ஒழிந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் முதலையைக் கயிற்றால் கட்டி, வெளியே செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மகாறம்பைக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையப் பார்வையிட்டு, அது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, இன்று (26) காலை அவ்விடத்துக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முதலையை மீட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி வானிலை காரணமாக, குளத்திலுள்ள முதலைகள் உணவையும் நீரையும் தேடி மக்கள் குடியிருப்புகளை நோக்கிச் செல்கின்றனவெனத் தெரிவித்த பொலிஸார், எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago