Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளாது, தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, அங்கு மீள்குடியேறிய 13,000 வரையான குடும்பங்கள் தமக்கான வீட்டுத்திட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாது, கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் கடந்த 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில், மீள்குடியமர்வின் போது, அப்போது ஆறு மாத காலத்திற்கு என வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளில், கணிசமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளானது, தற்கொழுது மிகவும் மோசமாக சேதமடைந்து, மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன்,
விசஜந்துக்களின் ஆபத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவித்த மக்கள், தமக்கான வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 minute ago
13 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
15 minute ago
1 hours ago