Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 22 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான 1.8 கிலோமீற்றர் நீளமான கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி, மீள்குடியேற்றத்துக்கு பின்னர் இன்றுவரை குன்றும் குழியுமாக காணப்படுவதோடு, வீதியின் ஒருபகுதி வாய்க்காலாக மாறியுள்ளது
இங்கு 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களில் 70 பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமலும் மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்குள்ளாகி அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இவ்வீதியை புரனமைத்துத் தருமாறு இது தொடர்பான அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் இதை கருத்தில் கொள்ளாமல் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
குறித்த வீதியில் ஒரு சிறு பகுதிக்கு (150 ஆடி) மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஒதுக்கீட்டில் வடிகால் அமைக்கப்படுவதாகவும் ஏனைய வீதி அவ்வாறே இருப்பதாகவும் அடுத்த மழைக்கு முன்னதாகவேனும் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோருகின்றனர்
எனவே இது தொடர்பில், குறித்த அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலாக மாறியுள்ள எமது வீதியை வீதியாக மாற்றி தர வேண்டும் என, அக்கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago