Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கிராமத்திலிருந்து அக்கராயன் மகா வித்தியாலயம் வரையான வீதியானது, வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் நிதிப் பங்களிப்புடன் தற்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 3 கிலோமீற்றர் வரையான குறித்த இவ்வீதியில் 2 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட்ட நிலையில், ஈச்சங்குளத்தினைக் கடந்து செல்லும் ஒரு கிலோமீற்றர் வீதியினைப் புனரமைக்க 2 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என்ற நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த பகுதியினைப் பார்வையிட்டு, கடந்த ஒரு வார காலமாக வீதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் அக்கராயன் மகா வித்தியாலயம், ஸ்கந்தபுரம் இல.01 பாடசாலை, அக்கராயன் ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதுடன் அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், முக்கொம்பன், கோணாவில், வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், அமதிபுரம், அம்பலப்பெருமாள்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்கான சிறந்த வீதியினை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி மேற்கிற்கான போக்குவரத்தில் குறித்த 3 கிலோமீற்றர் வீதியின் புனரமைப்பு முக்கியம் பெறுகின்றது. அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு நோயாளர்கள் விரைந்து வருவதற்கும் அக்கராயன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகளுக்கு குறித்த வீதி புனரமைப்பு அவசியமாகின்றது. தற்போது குறித்த வீதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago