Editorial / 2018 மே 01 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
வெசாக் தினத்தில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது பரந்தன் பகுதியில் உள்ள கடையொன்றிலிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago