2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு விசேட பொறிமுறையில் மணல் விநியோகம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு, மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடுமையான கண்காணிப்புடன் மணல் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால்; 1,035 வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் மணலினைப் பெறுவதில் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொடங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மணலினை வழங்க வேண்டியது முக்கியமானதாகும். அது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். வரும் வாரத்தில் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களின் கண்காணிப்பில் மணலினை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆற்றுப் படுக்கைகளிலிருந்து மணல் களவாக டிப்பர்களில் ஏற்றப்பட்டு பிறவிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சூழல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுக்கமான தீர்மானத்துக்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் சகல ஆற்றுப்படுக்கைகளிலும் மணல் அகழ்வு மாவட்டச் செயலகத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .