2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

விமல் ரட்நாயக்க அக்கராயனுக்கு விஜயம்

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயனுக்கு சனிக்கிழமை (22) விஜயம் செய்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் அக்கராயன் பிரதேச விவசாய சம்மேளன நிர்வாகத்தை  தெரிவு செய்யும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அக்கராயன் மத்தி பொது நோக்கு மண்டபத்தில், அக்கராயன் நடைபெற்ற நிகழ்வில், அக்கராயன் பிரதேசத்துக்கான விவசாய சம்மேளனம் தெரிவு செய்யப்பட்டது.

பின்னர், அக்கராயன் 50 வீட்டுத் திட்ட மக்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், வங்கிகளை நம்பியிருக்காமல், சிறு குழுக்களை உருவாக்கி, சுழற்சி முறையிலான கடன்களை பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவியினை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அதனையடுத்து, வன்னேரிக்குளம் கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .