2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வெல்லாங்குளம் பிள்ளையார் கோவிலை புனரமைக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், வெல்லாங்குளம் பகுதியில் நிர்மூலமாக்கப்பட்ட பிள்ளையார் கோவிலைப் புனரமைக்குமாறு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் வெல்லாங்குளம் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில்,இனந்தெரியான நபர்களால் கடந்த காலத்தில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

அக்கோவில் பணியாளர்கள், இது குறித்து அமைச்சருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரஸ்தாப பிள்ளையார் கோவிலை வெகு விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்துமத அலுவல்கள் திணைக்களத்தைப் பணித்துள்ளார்.

இந்துமத அலுவல்கள் திணைக்களம், இக்கோவிலைப் புனரமைக்கும் பணியை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்க உள்ளது.

மேற்படி புனரமைப்புப் பணிகளை ஒரு குறுகிய காலத்துள் பூர்த்திசெய்து பக்தர்களுக்காக, இக்கோவிலை வழமைபோல் இயங்கக் கூடியவாறு வழங்கப்படுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .