2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மீளக்குடியமர்ந்த வளலாய் பகுதி மீனவர்;கள் 36 பேருக்கு, வாழ்வாதர உதவிகள், புதன்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவிபணிப்பாளர் ஜெயராஜாசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

மீளக்குடியமர்ந்து இதுவரை வாழ்வாதர உதவிகளை பெறாத மீனவர்;கள் 36 பேருக்கு 2.04 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

16 பேருக்கு 50,000 ரூபாய் பெறுமதியான வலைகள், 9 பேருக்கு 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளும், 11 மீனவர்களுக்கு 40,000 ரூபாய் பெறுமதியான வலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

யூ.என்.டி.பி நிறுவனத்தின் அனுசரணையுடன் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .