2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஹர்த்தாலுக்கு ஆதரவு

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன்விருத்தி அமையம், தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடக், மூவின சமூகத்தினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெறும் இந்த ஹர்த்தால், வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.

இவர்கள் வடக்கு - கிழக்கில  தொடர்ந்து முன்னெடுத்து வரும் அறவழிப்போராட்டங்களுக்கு சரியான நீதி வழங்கப்படவேண்டும். அதுவரை எம் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு  பூரண ஆதரவை வழங்குவோம்”என்று அந்த அமையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .