2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஹர்த்தாலால் முடங்கிய முல்லைத்தீவு

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், வடமாகாணம் முழுவதுமாக நேற்று வெள்ளிக்கிழமை (13) அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலால் முல்லைத்தீவும் முடங்கியது.

 இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன.

 கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இ.போ.ச போக்குவரத்து பஸ்களில் ஒரு சில மட்டும் போக்குவரத்து சேவையை முன்னெடுத்திருந்தன. ஏனைய பணிகள் யாவும் முடங்கி முல்லைத்தீவு மாவட்டம் வெறிச்சோடிக்காணப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .