2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘அதிகரித்த விலையில் விற்றால் முறையிடுங்கள்’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

“அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை குறைக்கப்படாமல் அதிகரித்த விலையில் விற்பனை செய்வது தொடர்பில்  முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நுகர்வோனர், முறைப்பாடுகளைத் தெரியப்படுத்தலாம்” என, பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின் தலைமையகம் தெரிவித்துள்ளத.

பல வர்த்தக விற்பனை நிலையங்களில், அரசாங்கத்தால் அண்மையில் விலைக்குறைப்புச் செய்யப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படாமல், அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, உட்பட பல பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகரித்த  விலைகளில்  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், நுகர்வோருக்கு விற்பனைச் சிட்டைகளும் வழங்கப்படுவதில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது  தொடர்பில் கேள்வி எழுப்பும் நுகர்வோருக்கும், வர்த்தகர்களும்  இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு  பின்னர், அது கைகலப்பில் முடிந்துள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இந்த  விடயம்  தொடர்பில் பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

“பொதுமக்கள், இது தொடர்பில் உடனடித் தொலைபேசி இலக்கங்களான, 011 -7755481, 011 -7755482, 011 -7755483, ஆகியவற்றின்  ஊடாகவோ அல்லது 011 -2321696 என்ற தொலைநகல்  ஊடாகவோ அல்லது chairmancaa@sltnet.lk என்ற  மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தரவும். இதற்காக உடனடியாக நடவடிக்கை மோற்கொள்வோம். அத்துடன், தகவல் தருபவர்கள் தொடர்பில்  இரகசியம் பேணப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .