Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“வறுமையை ஒழித்து, பொருளாதார ரீதியில் முன்னேறிச்செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமாகவுள்ளது” என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில், கேப்பாபுலவு மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில், புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே மாவட்டச் செயலாளர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மூவின மக்களையும் கொண்ட மாவட்டமாகக் காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சிறுகைத்தொழில் முயற்சிகள் என்பவை வாழ்வாதார தொழிலாக காணப்படுகின்றன.
மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கும், மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதியுதவி கிடைத்தது. அதன் மூலம், மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரம் ஏனைய உட்கட்டுமானப்பணிகளையும் முன்னெடுக்க முடிந்துள்ளது.
இந்த ஆண்டு, வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வறுமையொழிப்புக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், எமது மாவட்டம் வறுமையில் முதன்மை வகிக்கும் மாவட்டாக காணப்பட்டது. 2017ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு ஆண்டு என்பதைக் கருத்திற்கொண்டு, வறுமை ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதற்கான எமது மாவட்டத்தில் பலதேவைகள் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
எமது மாவட்டத்தில் காணப்படுகின்ற 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை மீள இயங்க வைக்க வேண்டியுள்ளதுடன், கூடுதலான கரையோரப்பிரதேசங்களையும் நான்கு வாவிகளையும் கொண்ட இந்த மாவட்டத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல செயற்பாடுத் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், இந்த மாவட்டத்தினது வறுமையை ஒழித்து, பொருளாதார ரீதியாக முன்னேறிச் செல்வதற்கு அனைவரும் இணைந்து உழைக்க வேண்டியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago