Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிளிநொச்சி யில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்போராட்டமும் பரவிபாஞ்சான் மக்களின் காணி மீட்புக்கான தொடர் பேராட்டமும், இரவு பகலாகத் தொடர்கிறது.
இன்று மூன்றாவது நாளாகவும், இரண்டு போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ள அம்மக்கள் கூறியதாவது,
“நாங்கள், மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். காணி, காணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடயங்களில், காலத்துக்குக் காலம் வெறும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பேசாமல் இருக்கிறார்களே தவிர, இவ்விடங்கள் தொடர்பில், எவ்வித ஆக்கபூர்வமான
எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, எங்களுடன் வந்து ஒரு சில மணித்தியாலயங்கள் இருந்துவிட்டுச் செல்வதனை நாம் விரும்பவில்லை. கடந்த காலங்கள் போன்று நடந்துகொள்ளாது, ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுங்கள்” என்று, அரசியல் பிரதிநிதிகளிடம், அம்மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago