2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை இன்று

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்மகம் தவசீலன்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ஜோசப் பிஜான்சிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மஜித் இளம்பரிதி  உள்ளிட்ட பன்னிரென்டு  பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட உறவினர்கள்  இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன், முன்னிலையில் கடந்த செப்ரெம்பர் மாதம் 29 ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிந்த போது நவம்பர் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என  நீதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணையின் போது அரசதரப்பு சட்டத்தரணி மன்றிற்கு சமூகமளிக்க முடியாது என நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.

இதற்கமைய குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல், 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தனவை குறுக்கு விசாரணை செய்திருந்தார்.

இந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தன முன்னர் தெரிவித்த கருத்துக்களுக்கும் தற்போது தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

58 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றவழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறியதாக சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

எனினும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலே தம்மிடம் இருப்பதாகவே முன்னர், தாம் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தன சுட்டிக்காட்டினார்

இதனைதொடர்ந்து இன்றும் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல், 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தனவை குறுக்கு விசாரணை செய்திருந்தார் இதனைதொடர்ந்து வழக்கு எதிர்வரும் தை மாதம் 30ம் திகதி இடம்பெறுமென  அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முதலாவது வழக்கு முடிவடைந்து எழுத்துமூலமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது  அதன்பின்னர் இரண்டாவது வழக்கு தொடங்கியிருக்கிறது  அதில் ஏற்கனவே மனுதாரர் சாட்சி அழித்தபடியால்   அதனை தொடர்ந்து வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் இரானுவ அதிகாரி ஒருவர் ஆயரானார்  அவர்தற்போது ஓய்வுபெற்றவர்  இவர் சாட்சியளித்தார்.

ஏற்கெனவே ஒருமுறை  மன்றில் கூறினார்  சரனடைந்தவர்களின் விவரம் உள்ளதாக கூறி  அடுத்த தவணையில்      புணர்வாழ்வு அழிக்கப்பட்டவரின் விபரத்தையே  கூறியதாக சமர்ப்பித்தார் அதணையே தற்போதும் சமர்ப்பித்தார் ஆனால் இதில் காணாமல்போனோர் தொடர்பில் விபரம் இருக்க வாய்ப்பில்லை மாறாக பலவருடங்களாக புணர்வாழ்வு பெற்ற பன்னிரெண்டாயிரம் போரின் விபரமே உள்ளது.

அதனை குறுக்கு விசாரனை செய்தபோது  இதில் காணாமல் போனேர் தொடர்பான விபரம் இல்லை மாறாக பலவருடமாக புணர்வாழ்வழிக்கப்பட்டவர்களின் விபரமே உள்ளது இதில் இறுதி நாட்களான 17 18 19 திகதிகளில் மே மாதம் 2009 சரணடைந்தவர்களின் விபரத்தையே கேட்டிருந்தோம் அது இருப்பதாகவே கூறினார்  ஆனால் அதன் பிறகு மனம் மாறி நீதிமன்றின் கட்டளையையும் மீறி வேறு ஒரு விவரத்தை கொண்டுவந்து நீதிமன்றத்தையும்  மக்களையும் மனதார எல்லாரையும் முட்டாளாக்கிய ஒரு செயற்ப்பாட்டை செய்திருக்கிறார் இதைவிட இறுதியுத்தத்தில் வடக்கு கிழக்கில்  காணமல்போனேரையும்  தெரியாது 1971 ம் ஆண்டளவில் தென்னிலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாகவும் தெரியாது என பதிலளித்ததர் இதனைதொடர்ந்து தை மாதம் 30 ம் திகதிக்கு தவனையிடப்பட்டுள்ளது 

பலதடைகளையும் பல அச்சுறுத்தலையும் தாண்டி இந்த மக்கள் துணிகரமாக  வழக்கை நகர்த்திவருவதாகவும் புலனாய்வாழர்கள் அச்சுறுத்தியும் வழக்கிற்கு வந்திருக்கின்றனர் இந்தவழக்கு துரிதமாக இடம்பெறுகிறது மற்றவழக்குகளும் இடம்பெறும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .