2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

13 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவசியம்

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்து 934 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவ்வாறு மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பல்வேறு தேவையுடைய குடும்பங்களாக காணப்படுகின்றன.

இதில் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சினூடாக முதற்கட்டமாக 1,600 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக சுமார் 14 ஆயிரம் ஏக்கர் வரையான சிறுபோக செய்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.அத்துடன், கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கு மாவட்டத்தில் 500 ஏக்கர் வரையான மேய்ச்சல் தரவைகளை ஏற்படுத்த வேண்டிய நிலையில், இதனை அளவீடு செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட 3 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .