2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

52ஆவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி,  52  ஆவது நாளாக இன்றைய தினமும்  வீதி ஓரத்தில் போராடி வருகின்றனர்

ஆனால், அரசாங்கமானது எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது  

நேற்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட மக்கள்,  ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண முதலமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர்  ஆகியோருக்கு தமக்கு விரைவில்  தீர்வை  வழங்குமாறு கோரி, மகஜர்களை  கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .