Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Niroshini / 2017 மார்ச் 05 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஆடு மேய்க்கச் சென்ற தன்னை, இராணுவ வீரர் ஒருவரே கத்தியால் குத்தியதாக, சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் மாரியம்மா (வயது 65) என்ற பெண் தெரிவித்தார்.
சாந்தபுரம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (03) பகல், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண், இராணுவ வீரர் ஒருவரினால், கத்திக் குத்துக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதயைடுத்து குறித்த பெண், அவரது மகனால், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்றுவரும் மேற்படி பெண்ணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வைத்தியசாலைக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
இதன்போதே குறித்த பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அப்பெண்,
“இராணுவ வீரரே என்னைக் கத்தியினால் குத்தினார். சாந்தபுரம் கிராமத்தை அண்டியுள்ள காட்டுப் பகுதியில் படையினர், காட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்து வரும் விடயம் வெளியே அம்பலமாகியது.
"அந்த விடயத்தை ஆடு மேய்ப்பதற்காக செல்லும் நானே சொன்னதாகக் கூறியே, குறித்த இராணுவ வீரர் என்னைக் கத்தியால் குத்தினார்” எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னைக் குத்திய இராணுவ வீரர், தன்னிடம் 5 தடவைகளுக்கும் மேல், இராணுவ சீருடையில் காட்டுக்குள் நின்று வெற்றிலை வாங்கிப் போட்டதாகவும், குறித்த இராணுவ வீரரை தன்னால் அடையாளம் காட்ட இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, விவரங்களை கேட்டு அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago