Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியான பதிலை, நல்லாட்சி அரசாங்கம் தான் சொல்ல வேண்டும். அதனை விடுத்து, வெளிநாட்டில் போய் தேடுங்கள் என்று பிரதமர் சொல்வது கண்டித்தக்கது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில், நேற்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், போராட்டம் நடாத்திய போது, காணாமலாக்கப்பட்டவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கலாம் என பிரதமர் கூறியிருந்தார்.
உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டு, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். நாம் எப்படி வெளிநாடுகளுக்குச் சென்று தேட முடியும்.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டுள்ளார்களா என்பதைச் சொல்லுங்கள். அதனை விடுத்து, வெளிநாட்டில் உள்ளார்கள் என்றால், இராணுவமா வெளிநாட்டுக்கு அவர்களை அனுப்பியது?
அவர்கள் காணமல்போக காரணமானவர்கள் இங்குதான் உள்ளார்கள். இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்பதனைக் கண்டறிந்து, உண்மையினை வெளிப்படுத்துங்கள்” என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago