Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான செயற்பாட்டு கலந்துரையாடல் 'உலக அமைதி வீட்டிலிருந்தே' என்னும் தொனிப்பொருளில் கிளிநொச்சி செயலக மகாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் எஸ்.சத்தியசீலன் கருத்துக்கூறுகையில்,
'யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களைக் கடந்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. முறைப்பாடு செய்யப்படும் வன்முறைகளைத் தவிர, வெளியில் தெரியவராத பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை, திணைக்களங்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதற்கு அதிகளவு நிதியை ஒதுக்கி செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
21 minute ago
33 minute ago