2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஊடக மகாநாடு

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்துக்கான ஊடக மகாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மான்றத்தின் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், நிஸ்கோ முகாமையாளர் சைமன் சில்வா, கணக்காளர் ஜோன் பொஸ்கோ உட்பட மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

எனினும், மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்துவதில்லை எனவும் எல்லா நிகழ்வகளையும் தொகுத்து அறிக்கையாக ஊடகவியலாளர்களுக்கு சமாப்பிக்கப்படுகின்ற போது முழுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, கலந்துகொண்ட மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், குறித்த ஊடகவியலாளரின் கருத்தை ஏற்றுக்கொண்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது எனவும் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேளைத்திட்டங்கள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் இளைஞர் சேவைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .