2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'எமது விரல்களை கொண்டு எமது கண்களைக் குத்த முயற்சி'

George   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது கைவிரல்களைக் கொண்டே எமது கண்களைக் குத்தும் முயற்சியில் இப்போது இராணுவம் இறங்கியுள்ளது” என்று, வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் புதன்கிழமை நடைபெற்ற, விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கும்  நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே பண்ணையை விட்டு வெளியேறலாம் என்று இராணுவம் நிபந்தனை விதித்திருக்கிறது.

சிவில் பாதுகாப்புப் படையில் உள்ளீர்க்கப்பட்ட எமது உறவுகளை வைத்தே இராணுவத்திடமிருந்து விவசாய நிலங்களைப் பறிக்காதே என்று எமக்கு எதிராக இராணுவம் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்குசெய்கிறது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .