2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'எவரும் கண்டுகொள்ளவில்லை'

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

"பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்ப்பட்ட தங்களின் உறவுகளுக்காக, அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த போதும்,  இந்தப் போராட்டததை எவரும் கண்டுகொள்ளவில்லை" என்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று (12) எண்பத்தி இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது.

தங்களை அனைவரும் கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்த அவர்கள், தமது கோரிக்கைகள்  நிறைவேறும் வரை போராட்டத்தைக்  கைவிடப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .