2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘எவ்வாறான முட்டுக்கட்டைகள் வந்தாலும் பொருத்துவீடு நிச்சயம் வரும்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

எவ்வாறான முட்டுக்கட்டைகள் வந்தாலும், பொருத்து வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று, மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.  

கடந்த செம்டெம்பர் மாதம், கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு, அமைச்சர் தலைமையில், நேற்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“வீட்டுத்திட்டத்தை மேற்கொள்வதில், பல பிரச்சினைகள் இருக்கின்றன. வீடமைப்பதற்கான மண் இல்லை. நிர்மாண வேலைகளைச் செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.  

இதனால், நான், பிரதமருடன் பேசி, முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். அந்த வீட்டுத்திட்டத்தின் கீழ், சுன்னாகத்தில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை,எத்தனையோ பேர் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆனாலும் அவற்றுக்கு எதிர்ப்பைக் காட்ட பலர் இருக்கின்றனர். அதனைப்பற்றி, இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை. எனினும், முற்றுமுழுதாக மக்கள் நலம் சார்ந்ததாகவே இத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .