2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

1515 ஏக்கர் நிலம் படையினர் வசம்

George   / 2017 ஏப்ரல் 23 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில், படையினரின் வசம் 1515.7 ஏக்கர் நிலம் உள்ளதாக, மாவட்டச் செயலகப் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மாவட்டச்  செயலகத்தில் இடம்பெற்ற, படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலின்போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில், தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கர், தனியார் உறுதிக்காணிகள் 168.2 ஏக்கர், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான  973.5 ஏக்கர் காணி என்பன, படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் 71 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

இதில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 218 ஏக்கர், தனியார் உறுதிக்காணிகள் 4 ஏக்கர், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 445 ஏக்கர் காணிகள் உள்ளன.

கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 128 ஏக்கர், தனியார் உறுதிக்காணிகள் 8 ஏக்கர், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 49 ஏக்கர் என்பன காணப்படுகின்றன.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 28 ஏக்கர், தனியார் உறுதிக்காணிகள் 85.7 ஏக்கர், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 479 ஏக்கர் என்பனவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் தனியார் உறுதிக்காணிகள் 70.5 ஏக்கர், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான 0.5 ஏக்கர் காணி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .