2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'ஒற்றுமையாக வாழ வழிவிடவேண்டும்'

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

"முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல் வாதிகள் இருப்பார்களேயானால், அவர்கள் அதனை விடுத்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும்" என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக வருகைதந்த அராபிய தனவந்தர்களை முல்லைத்தீவுக்கு, நேற்று (11) அழைந்துவந்தபோதே இதனைத் தெரிவித்தார். 

ஆடாத்தாகக் காணிகளைப் பிடித்து வீடுகள் கட்டுவதற்காக யாரும் வருவில்லை. வீடுகள் இல்லாத தமிழ், முஸ்லிம், சிங்கள, கத்தோலிக்க மக்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கே சில வெளிநாட்டு நலன்விரும்பிகள் இன்றைய தினம் வருகை தந்துள்ளனர். அவர்களது வரவை, சிலர் பிழையாக அத்தப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்வதை எந்தவொரு தமிழ் மக்களும் எதிர்க்க வில்லை. அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். அதைச் சிலர்  குறுகிய அரசியல் இலாபத்துக்காக மோதவிட்டு இலாபம் அடைய பார்க்கின்றார்கள்.

நாங்கள் அடிக்கல் நடுவதற்காக வருகை தரவில்லை. மக்களின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காகவே வந்துள்ளோம். காணிகள் கிடைக்கும் போது அனைத்து மக்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அது வெறுமனே முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் கட்டிக்கொடுக்கப்படும்" என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .