Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2017 ஜனவரி 15 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியிலிருந்த இராணுவத்தினர், வெளியேறி வருகின்றனர்.
கடந்த யுத்த காலத்தில், வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த ஓமந்தை சோதனைச்சாவடி, 21 பேருக்குச் சொந்தமான 24 ஏக்கர் காணியைக் கொண்டிருந்தது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு, காணி உரிமையாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அங்கிருந்த இராணுவத்தினர் அகற்றப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது, இராணுவத்தினரின் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களும் தளபாடங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
இன்னும் சில தினங்களுக்குள், குறித்த காணிகள், அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago