2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'கண்ணுங் கருத்துமாக இருங்கள்'

George   / 2017 மே 09 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மரங்களைப் பாதுகாத்து சூழலைப் பேணுமாறு துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“காடுகள் இருப்பதன் காரணமாகவே குளங்களின் நீர் உள்ளதுடன், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. மரங்களை அழிப்பதனால் பல இடங்களில் மழை வீழ்ச்சி கிடைக்காமை காரணமாக வரட்சி ஏற்பட்டு பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

“முத்தையன்கட்டு, வவுனிக்குளம் போன்ற முக்கிய குளங்களின் கீழே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதில் விவசாயிகள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .