2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'கமக்கார அமைப்பு வேண்டும்'

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில், புதிய கமக்கார அமைப்பு ஒன்றினை உருவாக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில், நெற்செய்கையிலும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் விவசாயிகள் ஈடுபடுகின்ற போதிலும், கிராமத்துக்கான தனியான கமக்கார அமைப்பு இல்லாததன் காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் தனியான கமக்கார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

அதிகாரிகளிடமும் இக்கோரிக்கை பற்றி தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தனியான கமக்கார அமைப்பு உருவாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை எனத் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் 750 குடும்பங்கள் வாழ்வதுடன் கூடுதலான குடும்பங்கள், விவசாயத்தினை நம்பியே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .