2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'கரையோரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்'

George   / 2017 மே 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சி மாவட்டத்தின் 127 கிலோமீற்றர் கரையோரப்பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் 28 கிராம அலுவலர் பிரிவுகள் கடற்கரையோரப்பகுதிகளை கொண்ட பகுதிகளாக காணப்படுகின்றன.

கிளிநொச்சி  மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றது. அதற்கு அடுத்ததாக கடற்றொழில் காணப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது கடற்கரைகள் மாசடைந்து வருகின்றன. பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் போன்ற கழிவுகள் காணப்படுகின்றன.

கடற்கரையோரங்களை பாதுகாக்கும் விசேட செயற்றிட்டம், மாவட்ட -மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியொழுப்ப முடியும் கடற்பாசிகள் போன்றவையும் பாதுகாக்கப்படவேண்டும்” என, கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .