2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்'

George   / 2017 மே 10 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கற்சிலைமடுவினை நடுநிலையாகக் கொண்டு குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கற்சிலைமடு, வசந்தபுரம், பேராறு ஆகிய பகுதிகள் மேட்டு நிலக் குடியிருப்புகளாகும். ஆண்டுதோறும் வரட்சியான காலங்களில் இக்கிராமங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்படுவது வழமையாகும்.

இது தொடர்பாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களிலும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .