Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்துள்ள தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர், மக்களின் பிரச்சினையை தென் பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பத்தேக சமித்த தேரர் உள்ளிட்ட குழுவினர், அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே பத்தேக சமித்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்ததோடு, கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண தம்மாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “இந்த நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள மக்கள் தனியாகவும், தமிழர்கள் தனியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவரவர் தனித்தனியாக வாழ்ந்தனர்.
எனினும், எங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிணைந்து பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். இனவாத அடிப்படையில் செயற்படுவதால் பிர்ச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
30 வருட யுத்தத்தின்போது அனைவரும் பாதிக்கப்பட்டோம். அனைவரும் தோல்வியடைந்தோம். வெற்றிபெற்றவரென்று யாருமில்லை. இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்க முடியாது. வடக்கில் ஒரு கருத்தையும் தெற்கில் ஒரு கருத்தையும் வெளியிட என்னால் முடியாது.
இந்த பிரச்சினையை நாம் நிச்சயம் தெற்கிற்கு எடுத்துச்செல்வோம். எங்களால் முடியுமான உதவிகளை நாம் செய்வோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
23 minute ago
58 minute ago